பக்கங்கள்

அப்பத்தா காவியம்-பகுதி 2- மன்மத புராணம்

அப்பத்தா காவியம் -பகுதி 2

மன்மத  புராணம் 


அப்பதாவுக்கும் ஆடிபூர எட்டூர் அம்மன் கூடல் திருவிழாவுக்கும் ஏதோ பூர்வீக சம்பந்தம் இருக்கவேணும். அப்பத்தா வயசுக்கு வந்ததது 1916ம் ஆண்டு ஆடி பூரத்தண்டு. செல்லாச்சன் பொங்கல் பானை கழுவி அப்பத்தாவை கெதியாக வா என்கிறா. அப்பத்தா சுவாமி அறை மூலையிலை வயித்தை பிசைஞ்சுகொண்டு நிக்கிறா. என்னடி பொன்னு? பொங்கலுக்கு போகவேணும் நேரம் போகுது, அம்மன் கோவில் மேளம் கேக்கயில்லையோ என்கிறா.

வெளியே வந்த அப்பத்தா  பின்பக்க பாவாடையை காட்டுறா. பொன்னு பெரிசாகியிட்டா. பொன்னு பெரிசகியிட்டா. மடமடவென்று முழு காரைக்கலட்டிக்கும் தெரிஞ்சுபோச்சாம். ஐயாகண்டுவின்ரை மூத்தக்கா மற்ற எல்லா மாமிகளும், வண்ணாத்தி முத்துபேய்ச்சி தூம சீலை மாத்திவிட , குப்பைதண்ணி வார்தாகளாம். வீடு முழுக்க கழுவி, அபபத்தாவை ஒரு மூலையிலை இருத்தி அறிவுரை சொல்லுறா முத்துபேய்ச்சி , இஞ்சை பாருங்கோ பொன்னு  நாச்சியார் , பெரியவள் ஆகி போட்டியள், மாசம் மாசம் தூமம் வரும். நல்லா சாப்பிடுங்கோ, இனிமேல் குதிச்சு கும்மாளம் எல்லாம் அடிக்க ஏலாது, சித்தாடைதான்  கட்ட வேணும். மாராப்பாலை மார்பை மூடி கொள்ளுங்கோ. வயசு பெடியங்களை தலை நிமிர்ந்து பாராதயுங்கோ,உங்கடை முறை மச்சான் கணவதி நயினாரோடை இனிமேல் பந்து அடிச்சு விழையாட ஏலாது, எண்டு சொல்ல, அப்பத்தா முகம் சிவந்து போறாவாம். இதுக்கிடையிலை செல்லாச்சன் உழுத்தம் மா களி கிண்டி நடுவிலை குழி  உண்டாக்கி நல்லெண்ணெய் விட்டு , முட்டை பொரியலும் செய்து சாப்பிடு மேனை எண்டு தீத்தி விட்டாவாம். அதுக்கு பிறகு நடந்த விழா எல்லாம் தான் முதல் பகுதி சுயபுரனத்திலை பார்த்தம்.

செல்லாச்சன் அண்டைக்கு பொங்க போகயில்லையாம். பக்கத்துவீட்டு அம்புசம்தான் இவைக்காண்டி பொங்கினாவம். செல்லாச்சன் மகளுக்கு வீட்டிலை காவல் இருந்தாவாம். அதுக்கு பிறகு அப்பத்தா வெளியிலை வாறதே இல்லை, மச்சான் கணவதியை கண்டால் மருண்ட மானை போலை  ஓடி அறைக்குளை போனால் வேளிய  வரவேமாட்டவாம்.

இதோ அதோ எண்டு வருஷம் நாலு உருண்டு ஓடிபோச்சு. 1920ம் ஆண்டு கணவதியும் படிப்பு முடிஞ்சு வேலைக்கு மனுப்போட்டு முடிவுக்கு காத்திருக்கிறார். வந்தாலும் வந்தது அந்த வருஷ ஆடிப்பூர எட்டூர் அம்மன் கூடல். முழு பெரிய வெள்ளாளன் குடியே தலை குனிஞ்சு நிக்கப்போற நாளுக்கு அத்திவாரம் போடப்போற நாளெண்டு  தெரியாமல் எல்லாகுடியும் தங்கடை தங்கடை பொங்கல் பானை சாமான்கள் பூசை பொருள் , நேர்த்தி வைச்ச கோழியோ ஆடோ எண்டு மாட்டு வண்டிலிலையொ குதிரை வண்டிலிலையொ ஏறி முனை கடக்கரைக்கு போய்ச்சினமாம்.

ஆடிபூர அம்மன் ஒன்று கூடல் திருவிழா சூரியன் உதிக்கவே சாதி சனம் எல்லாம் அங்கை போயிடுவினம். ஏழு, ஏழு  அரைகெல்லாம் எல்லா அம்மன்களும்  வந்திடுவினமாம். முத்துமாரி அம்மன், பத்திரகாளி அம்மன், கண்ணகை அம்மன், கருப்பு பெண்சாதி, கருமாரி, சிவப்பாச்சி , வீரகாளி , சொத்தி அம்மாள் எண்டு எட்டூர் அம்மன்களும் கூடி  நிண்டினமாம். பெரிய சப்பறம் கட்டி நல்ல பட்டு, பூ , மணிமாலைகள் , இந்தியவிலை இருந்து வந்த ரோசா பூ மலை எண்டு ஊருக்கு ஊர் போட்டியாக அம்மன்களை சோடிச்சு வந்துநிக்கினம்.

காலமை திருவிழா தொடங்கினால் நடுச்சாமம் மட்டும் நடக்கும். மத்தியானம் சூரியன் உச்சிக்கு வர பொங்கல் எல்லாம் அம்மன்களுக்கு படைச்சு சாதி சனம் எல்லாருக்கும் குடுத்து சாப்பிடுவினம். பிறகு நேர்ந்து விட்ட சாமான்கள் எல்லாம் ஏலத்திலை விடுவினம். வாற காசை எட்டாக பங்கு போடுவினம். பிறகு விளையாட்டு போட்டி நடக்கும்.

ஆறு மணிக்கு பொழுது பட்டபிறகுதான் கும்மாளமே ஆரம்பிக்கும். பானை பானையாக  பனங்கள்ளும், தென்னங்கள்ளும் வந்திறங்கும். காவடி ஆடம், கரகாட்டம் எல்லாம் நடக்கும், கடைசியாக இந்தியாவிலே இருந்து வந்த பரதநாட்டிய பெண்கள் பரத நாட்டியம் ஆடுவினம். அவர்கள் ஆதியிலை  தேவதாசிகள், அதாவது கடவுளுக்கு அர்பணிக்கபட்டவர்கள். பிறகு நிலச் சுவாந்தர்களும் பெரும் பணக்காரரும் அவர்களை தாசிகளா மாற்றி  விட்டார்கள்.

அவர்களோடு துணைக்கு வாற  பெயரிலை ஒரு டாப்பர் மாமாவும் வருவாராம். நடனமாட பேசின காசை விட மேலதிகமாக இந்த வியாபாரமும் நடக்குமாம்.எல்லா இளவட்டங்களும் ஏன் கலியாணம் கட்டி பிள்ளை குட்டி பெத்த பெரியவர்களும் தாசிகளிட்டை போவினமாம். டாப்பர் மாமா காசை எண்ணி வாங்கி அறையை காட்டுவராம். நல்லதா குடு மாமா என்டிறவைக்கு, வந்ததெல்லாம் திறம் சாமான்தான் எண்டு பல்லை இளிப்பாரம்.

அந்த காலத்திலை ஆம்பிளையள் தாசி வீட்டுக்கு போறது, வைப்பு வைக்கிறது எல்லாம் சகசமாம்.   ஆம்பிளையள் சாணி கண்ட இடத்திலை மிதிச்சு தண்ணி கண்ட இடத்திலை கழுவுவினம் எண்டு வெள்ளாளப் பெண்டுகள் அதை பெரிசாக கவலைப்படமாட்டினமம். BA படிச்ச கணவதி என்கிற கணவதிப்பிள்ளை பகல் முழுவதும் பொன்னுவை பார்த்து பார்த்து உடம்பெல்லாம் தினவெடுத்துப்போயிட்டுதாம். இரண்டு  மூண்டு சிரட்டை புளிச்ச கள்ளு உள்ளை இறங்க உணர்வுகளை தாங்கமுடியாமல் தவிச்சுப்போனாராம்.

மெதுவாக தாசியள்  தங்கியிருந்தபக்கம் போனாராம் ஆனால் டாப்பர் மாமா இன்னும் அரை மணித்தியாலம் கழிச்சு வாங்கோ  எண்டிட்டார். இந்த நேரம் பாத்து விதி அப்பத்தா வாழ்கையில் விழையாட  ஆரம்பித்தது. அம்மா நான் ஒண்ணுக்கு போகவேணும் எண்டுறா அப்பத்த்தா. கொஞ்சநேரம் பொறு இந்த நடனம் முடியட்டும் என்கிரா செல்லாச்சன். ஒருவரும்  துணைக்கு வரமாட்டினம் எண்டிட்டினம்.

பயந்து பயந்து போய் புளிய மரதடியிலை சலம் போனவள், தெப்பை குள  பக்கமா கை கழுவ போறா. நேர முன்னுக்குவாரர் கணவதி. எட! என்ரை பொன்னு  என்கிறார், மெதுவான கள்ளு வெறி, அதீதமான காம வெறி, இடம் பொருள் காலம் படிச்ச படிப்பு எல்லாம் மறந்து பொன்னுவின் இடுப்பை வளைச்சு பிடிக்கிறார். காலை முதல் கணவதியை பார்த்து பார்த்து கொதிக்கிற உலை போல அவள் உடம்பில் அனல் பறக்கிறது. என்னுடையவள் என்ற உரிமையில் அவர் அவள் இடுப்பை இன்னும் தன்னை நோக்கி இறுக்குறார். அவர் நெஞ்சில்  இரண்டு கைகளையும் வச்சு தள்ள பாக்கிறாள். நிமிர்ந்து அவருடைய முகத்தை பாக்கிறாள் பொன்னு , அண்ணலும் நோக்கினார் அவளும் நோக்கினாள், காமத்தீ கொழுந்துவிட்டு எரிந்தது. மார்பை தள்ளிய கை தளர்ந்துபோகிறது.

குனிஞ்சு கணவதி அவ உதட்டை கவ்வுகின்றார். மஹா வித்துவான் விரல்கள் பட்ட வீணை ஆனாள் அப்பத்தா என்கிற பொன்னு . தாய்வழியே வந்த மானம் மடம் அச்சம் நாணம் எல்லாம் இழந்து தன்னையே இழந்தாள். முன்னனுபவம் உள்ள கணவதி அவளை ஆட்டிவைக்கிறார் அவள் அவர் இழுத்த இழுப்புக்கு ஆடும் பொம்மை ஆனாள். அவர் தம்புரா வாசிக்கறார் அவள் வீணையாக மிளிர்கிறாள், அவர் பல்லவி வாசிக்கறார் அவள் மதுவந்தியாக ஒலிக்கிறாள். அவர் ஆலோலம் பாடு என்கிறார் அவள் அந்தாதியே  பாடி விடுகிறாள். கணபதி முங்கி முழுகி எழுகின்றார் பொன்னு  அசிங்கம்மாகி அவலப்பட்டு நிக்கிறா. பொன்னு அலங்கோலப்பட்டு  நிக்கிறாள். முறையாக எல்லாம் நடந்த்திருந்தால்  அது சாந்தி முகூர்த்தம். இப்ப இதுல்லாம் பெரிய விசயமில்லை, இது நடந்தது அந்த காலம்.

இதுதான் ஆம்பிளை சுகமோ , புஷ்பஹவிமனத்திலை இந்திரலோகம் போனமாதிரி இருக்கு.அங்கை எட்டூர் அம்மன்களுக்கு முன்னாலை தில்லானா துரித ஜதியில் முடிவுக்கு வருகிறது,இங்கு பெரிய வெள்ளாளன் குடி இழக்கக்கூடாததை இழந்து நிக்கின்றது. எல்லாம் முடிஞ்ச பிறகு இந்த உலகத்துக்கு வாறாள். மடமட வென்று சீலையை உதறி உடுக்கிறாள், கதனகுதூகல இராகத்தில் தில்லானா ஆடிய நடனமாது , நடனம் முடிஞ்சு மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க நிப்பாளே, அப்பிடி இளைக்கிறா, பயம் பிலு பிலு என்று அவளை ஆட்டி  வைக்கிறது.

கணபதி இன்னும் மந்தகாச உணர்விலேயே திளைச்சு போய் இருக்கிறார், அவர் திரண்ட மார்பு  மேலும் கீழும் எழுந்து விழுகிறது. பொது சாமானை அனுபவிக்கிறதை விட என்னுடையதை, எனக்கே உரியதை அனுபவிப்பது ஒரு தனி சுகம் என நினைக்கிறார். கணவதி அரை நிர்வாணமாக வேட்டியால் அரையை போர்த்தபடி வலக்கையை மடிச்சு  முழங்கையை நிலத்தில் ஊண்டி, கையில் தலை வைச்சு, வலகாலை நீட்டி, இடக்காலை மடிச்சு இடக்கையை முழங்க்காலிலை வைச்சு நாராயணசாமி மாதிரி படுத்திருக்கிறார். மெல்லிய புன்னகை தவழ "குதிர் உடைஞ்சதுக்கு நான்  கரணம் இல்லை என்கிறார்" செல்லமாக.

வெலெவெலத்து போறா பொன்னு, இந்த நாலு வருஷ காலத்திலை முதல்முறையாக பொன்னு முத்து உதிர்க்கிறாள் " என்ன சொல்லுறியள் ". கணவதி அமைதியாக கண்ணை வெட்டி சிரிக்கறார் " எல்லாம் உன்ரை வடிவுதான் காரணம்". நாணப்புன்னகையுடன் ம்ம்!! என்கிறாள். இரண்டடி எடுத்து தெப்பை குளப்பக்கமாக போக எத்தனிக்கிறாள். "பொன்னு  நாளைக்கே மாமாவையும், மாமியையும் வீட்டை  வந்து மாப்பிள்ளை கேக்கசொல்லு. பொன்னு சொல்லுறா இது ஆடி மாசம், கலியாணம் பேச மாட்டினம். கணவதி பிறகும் செல்லமாக "குதிர் உடைஞ்சது எனக்கில்லை, உனக்காக்கும் " எண்டு சொல்லி சீண்டுகிறார்.

எந்த ஒரு ஆழுமை நிறைந்த ஆண்மைக்குள்ளும் சிறு  பெண்மை ஒளிஞ்சு இருக்கும் என்பார்கள். சிவன் அர்தநாதீஸ்வரர் ரூபத்தில் இடப்பக்கம் பெண்ணும்  வலபக்கம்  ஆணுமாக  இருந்ததுபோல், மோகினி வடிவம் கொண்ட விஷ்ணுவை சிவன் மோகிக்க அவருடன் சேர்ந்து ஐயப்பனை பெத்ததுபோல , ஏன் வின்ஞானரீதியாக பாத்தாலும், மரபணுக்களில் ஆணை தீர்மானிப்பது X ,Y chromosomes  ஆனால் பெண்ணை தீர்மானிப்பது   X ,X chromosomes. ஏன் Y ,Y என்றில்லாமல்
X Y  என்று கலந்திருக்கிறது.

பிறகு அவள் கிட்ட வந்து தலை மயிரில் ஒட்டியிருந்த புல்லுகளை ஒவ்வொன்றா  எடுத்து விடுறார், அவள் சீலையில் ஒட்டி இருந்த காஞ்ச இலைகளை அவருடைய நீண்ட விரல்களால் பொறுக்கிவிடுறார், ஒரு கைதேர்ந்த தாதி போலை. இவ்வளவு நேரமும் அரேபியா குதிரை மாதிரி குமுறி நின்றவர் இப்பிடி ஆகி போட்டாரே. சிறுது வினாடிக்கு முன் பொன்னுவை தாசி ஆக்கியவர் தாதியாகி நின்றார்.கை விரல் நிகம் கூட படாமல்  அவள் மாராப்பை சீர் செய்து, மிகுந்த சிரத்தையுடன் பூக்கட்டும் பெண் போலை  குலைஞ்ச தலை மயிரை கை விரலாலே கோதி  பின்னி விடுகிறார். அவள் சிறு குழந்தைபோல் அவருடைய செயல்களை இரசித்து நிற்கிறாள்.

இந்த காட்சிகளை எல்லாம் பார்த்த கருவேல மரம்களெல்லாம் நாணி, அதன் பச்சை இலைகள் எல்லாம் ஊதா பூ நிறமாகி ததிகிடதோம் !! பாடிச்சுதாம். கருவேல மரத்திலை கூட்டுக்குள்ளை குஞ்சுகளோடை இருந்த பெண் புறா தன்  சிறகாலை குஞ்சுகளிண்டை கண்களை மூடி, போய் படுங்கோ மக்காள், காலையில இரை தேட போக வேணும் எண்டுதாம்.அதை பாத்த ஆண் புறா இன்னும் ஆறு மாசம் போனால்  இவ குஞ்சுகளும் இதை தான்  செய்வினம் எண்டு சொல்லி அகோரமாக குக்கூ !!என்று கூவிச்சுதாம்.

தன் அலங்கார கலையை அரங்கேற்றிய கணவதி, மெதுவாக பொன்னு என்கிறார். அதில் அவருடைய பாசம் பொங்கி  வழிகிறது, பிறகு சொன்னாராம் "தெப்பை குளத்துக்கு போய் முகம் கழுவி, வாய்  கொப்புளி, குளத்து படியிலை கற்பூரம் எரிச்ச கரி இருக்கும், பொட்டு  போட்டுக்கோ" பிறகு கணவதி சொல்லுறார் " என்ன இருந்தாலும் நீ என்ரை மாமா மகள் எல்லோ, என்ரை மச்சாள். எனக்கு உன்னிலை காதலை விட அன்பு தான் கூட" எண்டு அவள் கன்னத்தில் கிள்ளுகின்றார்.

என்ன இது திரும்பவும் உடம்பில் தீ பரவுகின்றதே, ம்ஹ்ம் இது சரிப்பட்டுவராது  எண்டு நினைச்சவள் "செய்யிறதையும் செய்து  போட்டு இந்த பேச்சுக்கு மட்டும் குறைவில்லை, எடுக்க கூடாததை எடுத்துப்போட்டு அச்சு வெல்ல கதைக்கு மட்டும் குறைவில்லை" என்கிறாள் பொன்னு. உனக்கேன் அச்சுவெல்லம் இங்கிலாந்திலை செய்த சாக்லேட்டே வாங்கித்தாரன் என்கிறார் கணவதி.

பொன்னு  முகம் கழுவி பொட்டுப்போட்டு கடற்கரைக்கு போக அம்மன்கள் கடல் தீர்த்தம் ஆட ஆயித்தம். செல்லாச்சன் கேக்கிறா " என்னடி ஒண்டுக்கு போனவ இவ்வளவு நேரம் போய்  வாராய், என்ன கக்கூசுக்கு போனனியே, வடிவா  கழுவினியே, அம்மன் காரியம் சுத்த பத்தமாக இருக்க வேணும் "என்கிறா. இல்லையாத்தா வழி தவறி மற்ற பக்கமா போயிட்டன் எண்டு சமாளிக்கிறா. பொன்னு ஒண்டுக்கு போனா ஆனா கக்கூசுக்கும் போகயில்லை, ஆனால் அவளே கக்கூசாகி வந்திருக்கிறா என்பதை தாயும் அறியவில்லை, மகளும் உணரவில்லை. வழி தவறிப்போகயில்லை, தவறக்கூடாததை தவறிவிட்டாள் எண்டதை இதுவரை அந்த கருவேலம் காட்டுக்கு மட்டுமே தெரிஞ்ச விஷயம். அந்த புறாக்களுக்கு மட்டும் பேசும் சக்தி இருக்குமேண்டால்!!! ஊழி தாண்டவமே காரைக்கலட்டியிலை ஆடி இருக்கும்.

பொன்னுவின்ரை ஒன்றுவிட்ட மச்சாள் மரகதம் , கலியாணமாகி மூண்டு மாசம், மூண்டு மாச கெர்பிணி, ஐயோ பொன்னு மச்சாள் களைப்பாய்  இருக்கு எண்டு சொல்லி பொன்னுவின் தோள் சாயிறா சாஞ்சவ, காமுகன் கை பட்ட குலஸ்த்ரீ மாதிரி பதறி, என்னடி மச்சாள் உன்னிலை ஆம்பிளை நாத்தம் அடிக்குது என்கிறா. நாசமாபோறவளே நாய்க்கு கனவிலையும் பீ தின்னுற நினைப்பாம், என்கிறா பொன்னு. என்னவோ, கணவதி அண்ணை உனக்காக காத்திருக்கு , காத்திருந்தவன் பெண்டிலை நேற்று வந்தவன் கொண்ட கதை நடக்காட்டி சரிதான் என்கிறா.

மரகதம் அந்தபக்கம் போன உடனை தோள்  பட்டையை மணந்து பாக்கிறா, ஐயோ அத்தான்ரை மணம். பரவசமாகி போறா  எனக்கு அந்த நெருக்கம் திரும்ப வேணுமே, மனம் அடம் பிடிக்கிறது. தன்னுடைய மார்பை  தானே கசக்கி கொள்ளுறா, செல்லாச்சன் திரும்பி பொன்னுவை கேக்கிறா என்னடி பொன்னு , பூச்சி புழு உள்ளை போயிட்டுதே என்கிறா, இல்லை ஆத்தா வேர்வை கசிவு என்கிறா பொன்னு.

ஒருபடியாக அம்மன்கள் தீர்த்தமாடி வெளியே வந்தவுடன் கற்பூர ஆரத்தி காட்டி முடிய , ஆறு பூசாரிகளும் குடுமியை அவித்து விட்டு தலையை சொறிவாங்களாம். என்ன ஐதீகம் எண்டால் அம்மன்கள் அடுத்த ஆடிப்பூரம் வரும் வரையும் எப்பிடி எட்டூர்களையும்  தர்மபரிபாலனம் பண்ணலாம் எண்டு யோசிக்கிறாங்களாம். வழக்கப்படி அதுமுடிய பூசாரியளும் குடும்பியை கட்டி எல்லா அம்மன்களும் ஐஞ்சு அடி முன்வைச்சு மூண்டு அடி பின்வைச்சு இடப்பக்கமும் வலபக்கமுமா ஆடி ஆடி சப்பரத்திலை இருந்து கோவிலுக்கு போவினமாம். ஆட்களும் அவ அவ ஊருக்கு போயிடுவினாமாம், ஆனால்  அண்டைக்கு காரைக்கலட்டி அம்மன் முத்துமாரியம்மன் பூசாரி மட்டும் குடுமியை கட்டாமல் உரு வந்து ஆட தொடங்கி விட்டார்.

கையையும் காலையும் உதைச்சுகொண்டு  ம்ம்ஹ்ம்!! எடேய் முத்துமாரி வந்திருக்கேன்டா  ம்ம்ம்ஹ் ம் !! என்கிறார். ஊர்காரங்கள் எல்லாம் ஒருவர் முகத்தை ஒருவர் பாக்கினம். நினைவு தெரிஞ்ச நாளிலை  இருந்து எட்டூர் அம்மன் விழாவிலை அம்மன் இறங்கிறது வழக்கமில்லை.  அவை அவை ஊர் அம்மன் கோவில் வேள்வியிலை தான் அம்மன் இறங்கும். என்னடா இது வழக்கத்துக்கு மாறா இருக்கே எண்டு முழி பிதுங்கி விக்கிப்போய் தலைக்கட்டை பாக்கிறாங்களாம்.

1920ம் ஆண்டிலை தலைக்கட்டாய் இருந்தது எண்டை அம்மாச்சியோடை தகப்பன் மயில்வாகனம். என்ரை  பூட்டப்பா வாக்கும். அப்ப தலைக்கட்டு, " அம்மாளாச்சி  என்ன குறை தாயி,  வைச்ச குறை  என்ன தாயி , வேளை தப்பி வந்திட்டியே என்கிறார்,  முத்துமாரி வாய் துறக்கயில்லை. பிடாரி அம்மன் பூசாரி பாட்டா தொடர்ந்தாராம் "வைச்சகுறை என்ன தாயி, மூண்டு நேர பூசை வைக்கயில்லையோ , பால் அபிஷேகம் பண்ணயில்லையோ ,  சுத்த பத்தமா இருக்கயில்லையோ , தான தருமம் பண்ணயில்லையோ, என்ன குறை வைச்சம் தாயி " அவர் முடிக்க முன்னம் இறங்கி வந்த முத்துமாரி சொன்னவாம், "தலைக்கட்டு, தலைக்கட்டு, ம்ம்ஹ்ஹ்ம்ம்ம் !!!!!கருவேலம் காட்டுக்குள்ளை விதை ஒன்று ஊன்டியாச்சு , வினையாக போகுது, வினை சூழப் போகுது ஂஹ்ஹ்ம்ம்ம் !!!!. தலைக்கட்டு யோசிச்சாரம் "கருவேலம் காட்டுக்கும் பெரிய வெள்ளாம் குடிக்கும் என்ன சம்பந்தம், முனை கடக்கரையையும், பக்கத்திலை இருக்கிற கருவேலம் காட்டையும் மூண்டு நாளைக்கு பத்து பறை அரிசி குடுத்து மீன் பிடிக்கிறவையிட்டை குத்தகைக்கு எடுத்திருக்கு, அம்மாளாச்சி, என்ன சொல்லுறா.

முத்துமாரி அம்மன் தலைக்கட்டு மனசை அறிஞ்சு , ஊண்டின விதை உங்கடை விதை , பெரிய வெள்ளாளன் குடி விதை, பிசாசுகளும், பேய்க்கூட்டமும் பிணம் தின்னிற வேளையிலை , நடுக்காட்டிலை , இயமகண்டத்திலை, தெற்க்கு திசை பாத்து விதையூண்டினாலும், எட்டூர் அமணும் ஒன்றுகூடி நிண்டதாலை, விதை ஊண்டின  நேரம் சுப நேரம் ஆச்சு  ம்ம்ம்ஹ்ஹ்ம்ம்ம்!!! என்கிறா ஆத்தா. முளைக்கபோறது தெய்வப்பிறவி எடா , இன்னு பத்துவரிசம் போய், அரண்மனை வீட்டிலை, நீ நியாயம் சொல்லுற நடுக்கூடத்திலை , சாதி சனம் கூடி இருக்க. உன்னை நியாயம் கேக்குமெடா , நியாயம் கேக்குமாடா, சாதி சனம் எல்லாம் தலை குனிஞ்சு நிக்குமெடா, நீயும் உன் சாதியும் அலமந்துபோய்  நிப்பியள் ." அம்மானுக்கு ஆக்ரோஷம் கூடிகொண்டே  போகுதாம்.

தலைக்கட்டுவுக்கும் மற்றவைக்கும் விளங்கினமாதிரியும் விளங்காமலும் இருக்காம். பொன்னு தான் செய்ததை தானோ அம்மன் சொல்லுறாவோ எண்டு நினைச்சவ , "ம்ம்ஹ்ம் இருக்காது, அப்பிடி எண்டால் ஒன்பது மாசத்திலை எல்லோ தெரியும், இதென்ன பத்து வருட கணக்கு". தலை சுத்தி "அம்மாளாச்சி காப்பாத்து , அம்மாளாச்சி மன்னிச்சிடு, தெரியாமல் பிழை விட்டிட்டன் " எண்டு மனசுக்குள்ளை கும்பிட்டாவாம்.

அம்மன் இன்னும் மலை ஏறவில்லை. தலைக்கட்டு யோசிச்சாரம், வழக்கமாக அடுத்த வருடம் மழை வருமோ.அம்மாள் நோய் பரவுமோ எண்டு சொல்லுறவ, இது என்ன பத்துவரிச கதை சொல்லுறா, ஒருவேளை இந்தப்பூசாரி கள்ளு போட்டிட்டு பேய்க் கதை சொல்லுறானோ எண்டு நினைக்கிறார்.அவ்வளவுதான் " எடேய், மயில்வாகனம் , மூளை  கெட்ட முண்டம் ' எண்டு ஆரம்பிக்கிறா . முழு சனமும் அதிர்ந்து போச்சாம், ஏனெண்டால் தலைகட்டை இவ்வளவு அவமரியாதையாக ஒருவரும் ஒரு காலமும் கூப்பிட்டதே இல்லை. "எடேய் நான் சோமபானம் குடிக்கயில்லை, எடேய் தலைக்கட்டு உன்னை நியாயம் கேக்கிறது என் பெயரிலை பாதி  கொண்டிருக்கும், உன்னை நியாயம் கேட்டு பதினேழு வருசத்திலை உன்ரை பெரிய வெள்ளாம் சாதி வெறும் வெள்ளாம் சாதி மட்டும் எண்டாகும்,  ஆனால் பெரிய தனம் வரும் , பெரிய தனம் வரும்,மாப்பிள்ளை கேட்டுவரும். மறுக்கமுடியாமல் சாதி கெட்டு போவியள்"

தலைக்கட்டு  பெண்சாதி சின்னபிள்ளை அதுதான் என்டை பூட்டாச்சி , என்ன அம்மாளாச்சி எல்லாம் கெட்டதாகவே சொல்லுறியே ஒரு செய்தியாவது நல்லதா சொல்லு ஆத்தா எண்டு மனதுக்குள்ளை நினைச்சாவாம் , அவ்வளவுதான் முத்துமாரி கவனம் முழுக்க அவவிட்டை போயிட்டுது, "எடியேய் தலைக்கட்டு பெண்டில் சின்னப்பிள்ளை" என்கிறா அம்மாள். அண்டைக்குததான் கனபேருக்கு பூட்டாச்சி பெயர்  சின்னபிள்ளை எண்டு தெரியும், வழக்கமாக அவவை தலைக்கட்டு பெண்டில் எண்டுதான் ஊரிலை கூபிடுவினம். அவவுக்கு அப்ப ஒரு ஐம்பது  வயசிருக்குமாம். அவ மெதுவாக தலைக்கட்டு பின்னலை ஒளியிரா. "எடியேய் வெளியிலை வாடி சீவி முடிச்ச சிங்காரி , நீ பொன் எண்டு நினைச்சதெல்லாம் பீயா போகும், நீ உன்சாதி மானம் காக்க என்னவும் செய்வாய் ஆனால்  உலை வாயை மூடினாலும் ஊர் வாயை மூட ஏலுமோ" என்கிறா அம்மாள், பூட்டாச்சிக்கு பொன்னாச்சனில் அளவுகடந்த விருப்பமாம். அம்மாள் பொன்னுவை பூடகமாக சொன்னபோதிலும் ஒருவரும் அதை நினைக்கவில்லை.

"இன்னும் இருக்கடி வாழ்வாடிச்சி, இன்னும் முப்பத்தி ஏழு வருடத்திலை காவிஉடை கட்டினவன் கத்திகொண்டு வருவான் , விளக்கெண்ணை ஊற்றி வீடுகளை எரிப்பான். உன்குடி மாத்திரம் இல்லை முழு  தமிழ் குடியே கதறுமெடி, உன் சந்ததி ஊரை விட்டு பரதேசம் போகுமடி, ம்ம்ம்ஹ்ம்ம் !!!"

அம்மாள் சொல்லுறா  " எடேய் தலை கட்டு என்னை கட்டவிழ்த்து விடசொல்லு நான் உங்கள்ளூரை காவல் காக்கேலாது. எல்லா சனமும் அம்மாள் காலிலை விழுந்து கதறுகினம், தலைக்கட்டு பெரிய குரலிலை "அம்மாளாச்சி எங்களை விட்டுப்போகாதை, நூறு  வருஷமா இந்த குடியை காத்தவ, எப்பிடி தாயி நாங்கள் நீ இல்லாமல் வாழ  ஏலும்" எண்டாராம். காவல் தெய்வம் என்கிற ஐதீகம் என்னவெண்டால், காட்டுக்குள்ளை அம்மனை அடையாளம் கண்டு மந்தரிச்சு கட்டி கொண்டு ஊருக்கு எல்லையிலை காவலுக்கு வைப்பினம். ஒரு மண்டலம் அதாவது நாப்பது நாள் மூண்டு வேளை  பூசை செய்து ஊர்ச்சனம் கும்பிட்டால் அம்மன் மனம் இரங்கி காவல் தெய்வமா அங்கேயே இருந்திடுமாம். அந்த வகையிலை ஒருவதான் சொத்தி அம்மாள், கட்டின பூசாரி வடிவாக கட்டாமல் விட்டதால, ஒரு கால் தப்பியிட்டுதாம், அதுதான் அம்மன் நொண்டி நொண்டி ஊர் காவலுக்கு போவா. இதுதான் ஐதீகம், இதுக்குமேலை எனக்கு தெரியாது.

அமாளாச்சி "எடேய் நீங்கள் கட்டவுக்கா விட்டால் என்ன நீங்கள் ஒரு மண்டலம் பூசை செய்யாமல் விட, கட்டு தானா அவிழும்" என்டவாம், அதுக்கு தலைக்கட்டு பதை  பதைச்சு "என்ன ஆத்தா நூறு வருஷமா தவறாமல் மூண்டு வேளை பூசை செய்யிறம் எப்பிடி ஒரு மண்டலம் பூசை தவறும்" என்கிறார். " எட  போக்கத்தவனே மயில்வாகன மக்கு, அது பிரம்மலிபி எடா, பிரம்மலிபி அழிச்சு எழுத ஏலாது.  எடேய் உனக்கு தெரியுமே உஞ்சந்ததி ஒரு காலத்திலை பரதேசம் போக நீ நியாயம் சொன்ன அரண்மனை வீட்டிலை, நட்ட நடு விலை பெரிய அரச மரமே முளைக்கும். அதுதான் பிரம்மலிபி" எண்டு சொல்லி முடிய  பூசாரி மயக்கமாகி மண்ணிலை  சரிஞ்சுபோனாராம்.

அவருக்கு மயக்கம் தெளிய ஊர்ச்சனம் எல்லாம் "என்ன இழவோ, என்ன கலிகாலமோ" எண்டு மனசு பாரமாகி முத்துமாரியை திரும்பி  திரும்பி பார்த்தபடி அவை அவை வீட்டுக்கு போய்  சேந்தினமாம்.

தொடரும் ..........கருத்துரையிடுக